வால்பாறையில் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து திமுகவினர் கருப்பு கொடியுடன் கண்டன ஆர்ப்பாட்டம்..!

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலையை கட்டுப்படுத்தவும் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி கோஷமிட்டனர்.


கோவை: வால்பாறையில் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் மத்திய அரசின் ஜனநாயக மக்கள் விரோத போக்கு, பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரி வாயு உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வினை கண்டித்து முன்னாள் ஒன்றிய செயலாளர் கோழிக்கடை கணேசன் தலைமையில் கோவை மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் மகுடீஸ்வரன் முன்னிலையில் இன்று கருப்பு கொடியுடன் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் திமுக ஒன்றிய செயலாளரும் LPF. தொழிற்சங்க தலைவருமான கோழிக்கடை கணேசன், கோவை மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகுடீஸ்வரன், நகர துணை செயலாளர் கண்ணன், LPF தொழிற்சங்க பொதுச்செயலாளர் வழக்கறிஞர் வினோத்குமார், தமிழ்ச்செல்வன் என்கிற வடை கடை குட்டி உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலையை கட்டுப்படுத்தவும் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தியும் கோஷமிட்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...