திருப்பூரில் தொடர் திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட வந்த குற்றவாளிகள் கைது.!!

திருட்டு, செல்போன் பறிப்பு, கூட்டு கொள்ளை முயற்சி மற்றும் வழிப்பறியில் ஈடுபட்ட பழங்குற்றவாளிகள் ஆறு பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.



திருப்பூர்: திருப்பூர் மாநகரத்தில் கூட்டு கொள்ளை முயற்சி மற்றும் வழிப்பறியில் ஈடுபட்ட பழங்குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பூர் மாநகரத்தில் திருட்டு, வழிப்பறி, செல்போன் பறிப்பு, கூட்டுக்கொள்ளை ஆகிய குற்றங்களைத் தடுக்கவும், திருப்பூர் மாநகரத்திலுள்ள பழங்குற்றவாளிகளை பிடிக்கவும் தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

தனிப்படையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு, திருப்பூர் மாநகரம் வடக்கு காவல் நிலையத்தில், கூட்டுக் கொள்ளையில் ஈடுபட முயன்ற காளிதாஸ், சௌந்திரபாண்டியன், அபினேஷ் ஆகியோரையும், தொடர்ந்து 15-வேலம் பாளையம் காவல் நிலையத்தில் செல்போன் வழிப்பறியில் ஈடுபட்ட விஜய், கவின் ஆகியோரையும் கைது செய்துள்ளனர்.

இதேபோன்று திருமுருகன் பூண்டி காவல் நிலையத்தில் மிரட்டி பணம் பறிக்க முயன்ற செல்வராஜை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஆறு குற்றவாளிகளும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

வார்டு வளர்ச்சிப் பணிகள் புறக்கணிப்பு குற்றச்சாட்டு; கோவையில் தி.மு.க கவுன்சிலர் தர்ணா

கோவை அருகே தென்கரை பேரூராட்சி மன்றக் கூட்டத்தின் போது, தனது வார்டில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் தூய்மைப் பணிகள் புறக்கணிக...

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...