பொள்ளாச்சி அடுத்த நெகமம் நான்கு சாலை சந்திப்பில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 2-டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு, டிரைவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே உள்ள நெகமம் பகுதியிலிருந்து கடத்த முயன்ற 2-டன் ரேஷன் அரிசி பறிமுதல். ஒருவர் கைது.
பொள்ளாச்சி அடுத்த நெகமம் நான்கு சாலை சந்திப்பில் நேற்று இரவு உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த நான்கு சக்கர சரக்கு வாகனத்தை நிறுத்திச் சோதனையிட்டபோது அதில் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, வாகனத்தை ஓட்டி வந்த புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியைச் சேர்ந்த சரவணகுமார் ( 19 ) என்பவரைப் பிடித்து காவல்துறை விசாரணை நடத்தியதில் நெகமம் பகுதியிலிருந்து ரேஷன் அரிசியைப் பெற்று கேரளாவுக்குக் கடத்திச் செல்வது தெரியவந்தது.
இதையடுத்து, சரவணகுமாரைக் கைது செய்த காவல்துறை சரக்கு வாகனம் மற்றும் 2-டன் ரேஷன் அரிசியைப் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, சரவணகுமார் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறை அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.