வால்பாறையில் உணவுத்தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த 3 காட்டுயானைகள்; அச்சத்தில் துரத்த முயன்ற பொதுமக்கள்!

வால்பாறையில் இரவு நேரத்தில் உணவுத்தேடி குடியிருப்புப்பகுதிக்குள் நுழைந்த 3 காட்டுயானைகளால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் உரிய நடவடிக்கை எடுக்க வனத்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவையைப் பொறுத்தவரை பெரும்பாலான யானைகள் வழித்தடங்கள் எல்லாம் குடியிருப்புபகுதிகளாக உள்ளன.

இதனால் பல நேரங்களில் உணவுகளைத்தேடி வழக்கம் போல அந்தப்பகுதியை நோக்கி யானைகள் வருவது வழக்கமான ஒன்றாக உள்ளது. எனவே இதனைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை தேவை என அப்பகுதி மக்கள் தொடர்ந்து வனத்துறையிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருந்தப்போதும் காட்டுயானைகளின் அட்டகாசத்தால் மக்கள் ஒவ்வொரு நாளும் பெரும் சிரமத்தை சந்தித்துவருகின்றனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் வால்பாறை அருகே உள்ள ஈடியார் எஸ்டேட் பகுதிக்குள் மூன்று காட்டுயானை நுழைந்தது. அப்பகுதியைச்சேர்ந்த சுரேஷ், கருப்பசாமி, ஜான் தாமரையின் வீடுகள் மற்றும் ரேசன் கடைகளை இடித்து சேதப்படுத்தியதோடு அங்குள்ள அரிசு, பருப்பு, சர்க்கரை போன்றவற்றை சாப்பிட்டுவிட்டு சென்றது. இதனையடுத்து அதிர்ச்சியடைந்த மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்ததோடு, வீடுகளில் உள்ள பாத்திரத்தின் மூலம் சத்தம் எழுப்பி யானைகளை வனப்பகுதிக்குள்விரட்டியடித்தனர்.



இதோடு யானைகள் ஜான் வீட்டை இடிக்கும் போது ஜான் மற்றும் அவரது மனைவி மற்றும் மகள் வீட்டின் சமையல் அறை வழியாக தப்பித்து உயிர்தப்பினர்.



இதனால் மிகுந்த அச்சத்தில் உள்ள வால்பாறை எஸ்டேட் பகுதியில் வாழும் மக்கள் யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் வருவதைத்தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...