ஒற்றை கையில் சிலம்பம் சுற்றியபடி 20-கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டி கோவையை சேர்ந்த பள்ளி மாணவர் நோபள் புக் ஆப் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.
கோவை: ஒற்றைக் கையில் சிலம்பம் சுற்றியபடி 20-கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டி கோவையைச் சேர்ந்த சிறுவன் சாதனை படைத்துள்ளார்.
கோவை குரும்பபாளையம் பகுதியை சேர்ந்த சிவப்பிரகாஷ், ரம்யா தம்பதியரின் மாகனான பள்ளி மாணவன் இந்திரஜித். தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வரும் இவர் சிறு வயது முதலே சிலம்பம் கற்று வருகிறார்.
இந்நிலையில் சிலம்பம் சுற்றுவதில் உலக சாதனை படைக்க விரும்பிய மாணவர் கடந்த சில மாதங்களாகச் சைக்கிள் ஓட்டியபடியே சிலம்பம் சுற்றி பயிற்சி எடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில் சாதனைக்குத் தயாராகிய மாணவன் இந்திரஜித் 20 கிலோமீட்டர் சைக்கிள் ஓட்டியபடியே ஒற்றை கையில் சிலம்பம் சுற்றி நோபள் புக் ஆப் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.
முன்னதாக காளப்பட்டியில் தனது சாதனை பயணத்தைத் துவக்கிய மாணவன் இந்திரஜித், விளாங்குறிச்சி, கோவில்பாளையம் பகுதியாக அன்னூர் வரை சுமார் 20 கிலோமீட்டர் சிலம்பத்தைச் சுற்றியபடி சைக்கிள் ஓட்டி சென்றார்.
சிலம்பம் சுற்றுவதில் புதிய சாதனை படைத்த மாணவன் நோபள் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.