சாலையோரத்தில் நடந்து வந்த போது கவனக்குறைவாக இருசக்கர வாகனத்தில் வந்த நபர் நடந்து சென்ற ஆறுச்சாமி மீது மோதியதில் தலை மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோவை: கிணத்துக்கடவு அருகே இருசக்கர வாகனம் மோதி கூலி தொழிலாளி படுகாயம் அடைந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள வடபுதூர் மதுரைவீரன் கோவில் பகுதியை சேர்ந்தவர் ஆறுச்சாமி(64), கூலித் தொழிலாளியான இவர் கடந்த 18-ஆம் தேதி தனது வீட்டிலிருந்து சாலையோரத்தில் நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் வேகமாகக் கவனக்குறைவாக இருசக்கர வாகனத்தில் வந்த நபர் நடந்து சென்ற ஆறுச்சாமி மீது மோதினார். இதில் ஆறுசாமிக்கு தலை மற்றும் முகம் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் ஆறுச்சாமியை மீட்டு 108-ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், படுகாயம் அடைந்த ஆறுசாமியின் மனைவி நஞ்சம்மாள்(55) கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் நேற்று மாலை கொடுத்த புகாரின் பேரில் இருசக்கர வாகனம் ஓட்டிவந்த கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த இளங்கோவன்ராஜ்(24) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.