கோவையில் முன்னாள் எம்.எல்.ஏ கார்த்திக் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்!

கோவையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா. கார்த்திக் முன்னிலையில் இன்று 100க்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணைந்தனர்.


கோவை: தமிழகத்தில் மு.க ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்றதையடுத்து மக்களுக்குத் தேவையான நலத்திட்டங்களை நிறைவேற்றுகிறார் என கூறப்படும் நிலையில், பல்வேறு கட்சியினைச்சேர்ந்தவர்கள் திமுவினர் இணைந்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் இன்று கோவை மாநகர் கிழக்கு மாவட்டம், சிங்காநல்லூர் பகுதிகக்கழகம் மற்றும் வார்டு எண் 60, ஒண்டிப்புதூர், ஆஞ்சநேயர் காலணி பகுதியைச் சேர்ந்த திமுகவினர் சார்பில் இன்று நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.



இதில் சிங்காநல்லூர் பகுதிக்கழகம் – 1 பொறுப்பாளர் எஸ்.எம் சாமி கழக்கொடியை ஏற்றி வைத்து நிகழ்ச்சியை தொடங்கினார்.



இந்த நிகழ்ச்சியின் போது, கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நா. கார்த்திக் முன்னிலையில் சுமார் 100 க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர் இன்று திமுகவினர் இணைந்தனர்.



இதனையடுத்து அப்பகுதியில் உள்ள மக்களுக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக நா. கார்த்திக் அங்குள்ள பொதுமக்களுக்கு காலை உணவை வழங்கினார்.

மேலும் இந்த விழாவில், கோவை மாவட்ட திமுக 60 ஆவது வட்டக்கழகப் பொறுப்பாளர் சரவணன்,60 வது வட்டக்கழகப் பொறுப்பாளர் ராஜேந்திரன், 60 வது வட்டக்கழகப் பொறுப்பாளர் சண்முகம், பட்டாசு பாலு, பார்த்திபன், சி.டி.சி.ராஜன், அரவிந்த், வாட்டர் சிவா, பூங்கோதை ராஜாமணி, நடராஜ், நளினி, ஆறுமுகம், சரவணன், வனிதா, கௌதம், நவீன், பெரியசாமி, முத்துச்செல்வன, கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துக் கொண்டனர்.

Newsletter

வார்டு வளர்ச்சிப் பணிகள் புறக்கணிப்பு குற்றச்சாட்டு; கோவையில் தி.மு.க கவுன்சிலர் தர்ணா

கோவை அருகே தென்கரை பேரூராட்சி மன்றக் கூட்டத்தின் போது, தனது வார்டில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் தூய்மைப் பணிகள் புறக்கணிக...

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...