3-காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வீட்டின் ஜன்னல் கதவு மற்றும் அருகில் உள்ள நியாய விலை கடையை உடைத்து அட்டகாசம் செய்துள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
வால்பாறை: வால்பாறை அருகே ஈடியார் எஸ்டேட் பகுதியில் காட்டு யானைகள் தேயிலைத் தோட்ட குடியிருப்பை இடித்துச் சேதப்படுத்தியது.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளில் வீடுகளை இடித்து சேதப்படுத்துவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

வால்பாறை அருகே ஈடியார் எஸ்டேட் பகுதியில் 3-காட்டு யானைகள் அப்பகுதியைச் சுற்றி வந்தது. இந்நிலையில், இரவு அப்பகுதி குடியிருப்பு பகுதியில் நுழைந்து செல்வி என்பவர் வீட்டின் ஜன்னல் கதவு மற்றும் அப்பகுதி நியாய விலை கடையை உடைத்து சேதப்படுத்தியது இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இதை வால்பாறை தி.மு.க பொறுப்பாளர் பால் பாண்டி மற்றும் 10-வது வார்டு கவுன்சிலர் செல்வம் மற்றும் கிருஷ்ணமூர்த்தி நல்லதம்பி ஆகியோர்கள் யானையால் சேதப்படுத்தப்பட வீட்டில் உள்ளவர்களுக்கு ஆறுதல் கூறி யானைகள் குடியிருப்பு பகுதிகளில் வராமல் தடுக்க வனத்துறைக்குக் கோரிக்கை விடுத்தனர்.