திருப்பூர் மாவட்டத்தில் தான் அதிகமான தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதால் கொரோனா குறித்து பள்ளி மாணவர்கள் அச்சப்பட வேண்டாம் – சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

தமிழகத்தில் மற்ற மாவட்டங்களைக்காட்டிலும் திருப்பூரில் தான் அதிகமான அளவு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதால், பள்ளி செல்லும் மாணவர்களுக்கு கொரோனா குறித்த அச்சம் தேவையில்லை என திருப்பூரில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: தமிழகம் முழுவதும் இன்று 20 ஆயிரம் முகாம்களில் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற இலக்குடன் மெகா கொரோனா தடுப்பூசிமுகாம் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் இன்று திருப்பூர் மாவட்டத்திற்கு வந்த மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இம்மாநகராட்சிக்கு உட்பட்ட தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற மாபெரும்

கொரொனா தடுப்பூசி முகாமில் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வின் செய்தித்துறை அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன், தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.



இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரணமணியன், கடந்த வாரம் நடைபெற்ற முகாமில் முகாமில் 28 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு தமிழக அரசு சாதனை படைத்தது எனவும், அதில் மற்ற மாவட்டங்களை காட்டிலும் திருப்பூரில் தான் கூடுதலான தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக கூறினார். அதே போல் இந்த வாரமும் தமிழகம் முழுவதும் இருபதாயிரம் முகாம்களில், 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி என்ற இலக்குடன் மெகா தடுப்பூசி முகாம்கள் நடந்து வருகிறது என தெரிவித்தார்.

இதோடு திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை 18 வயது பூர்த்தியானவர்களுக்கு 67 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி 13 லட்சத்து 86 ஆயிரத்து 891 பேருக்கும், இரண்டாவது தவணை தடுப்பூசி 2 லட்சத்து 72 ஆயிரத்திற்கு மேற்பட்ட தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.இன்று

திருப்பூர் மாவட்டத்தில் 90 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்த முகாமில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக திருப்பூரில் பள்ளி மாணவர்களுக்கு ஏற்பட்ட தொற்று எவ்விதப் பாதிப்பும் இல்லாத தொற்று என்பதால் மாணவர்கள் மகிழ்ச்சியோடு பள்ளிக்கு வர வேண்டும் எனவும், இந்த நேரத்தில் வைரஸ் பரவல் குறித்த எந்த அச்சமும் தேவையில்லை என மா.சு மாணவர்களுக்கு அறிவுறுத்துகிறார். மேலும் த

தற்போது தட்டுப்பாடு காரணமாக முதல் தவணை கோவாக்சின் எங்கும் செலுத்தப்படுவதில்லை எனவும் தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களிடமும் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு உள்ளது ஆனால் மக்களுக்கு செலுத்த தடுப்பூசிதான் இல்லை என்று கூறினார். இதன் காரணமாக விரைவில் கூடுதலாக தடுப்பூசிகளை தமிழகத்திற்கு வழங்க மத்திய அரசு விரைந்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...