கிணத்துக்கடவில் ஆட்டோ ஓட்டுநருக்குக் கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது.!!

கிணத்துக்கடவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி வழக்குப்பதிவு செய்து ஆட்டோ ஓட்டுநர் பரமசிவத்திற்குக் கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை கைது செய்தனர்.


கோவை: கிணத்துக்கடவில் ஆட்டோ ஓட்டுநருக்குக் கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடியை சேர்ந்தவர் பரமசிவம்(35), ஆட்டோ ஓட்டுநரான இவர், கிணத்துக்கடவு பஸ் நிலையம் முன்பு உள்ள ஆட்டோ ஸ்டேண்டில் ஆட்டோ ஓட்டி வருகிறார்.

பரமசிவம் ஆட்டோ ஸ்டேண்டில் நின்றபோது அங்கு வந்த கொண்டம்பட்டி சேர்ந்த காவியபிரபு (21) என்ற வாலிபர் பரமசிவத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பொது இடத்தில் வைத்து கெட்ட வார்த்தையில் திட்டி, கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.

இதனையடுத்து, பரமசிவம் கிணத்துக்கடவு போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி வழக்குப் பதிவு செய்து பரமசிவத்திற்குக் கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...