கோவை கிணத்துக்கடவு அருகே மத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் சிறுதானிய பயிர்கள் சாகுபடி குறித்த சிறப்பு கூட்டம்..!

கம்பு, சோளம், வரகு, சாமை, திணை, குதிரைவாலி, பனிவரகு, கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானியங்களின் வகைகள் மற்றும் பயன்கள் குறித்து பள்ளி குழந்தைகளுக்கு விளக்கப்பட்டது.


கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே மத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் சிறுதானிய பயிர்கள் சாகுபடி குறித்த சிறப்பு கூட்டம் நடைபெற்றது.

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் கீழ் இயங்கும் கோவை மத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் உலக சிறுதானிய ஆண்டை (2023) வரவேற்கும் வண்ணம் விவசாயிகள் மற்றும் பள்ளி குழந்தைகள் பங்கு பெற்ற சிறப்பு கூட்டம் வடபுதூர் ஊராட்சியில் நடைபெற்றது.



ஊராட்சி மன்ற தலைவர் அபிநயா அசோக்குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கோவை மத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவன மண்டல நிலையத்தின் தலைவர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் கலந்து கொண்டு பேசுகையில், பள்ளி குழந்தைகளுக்கு சிறுதானியங்கள் குறித்து முக்கியத்துவத்தையும் அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.

அதேபோல, மாறிவரும் உணவு பழக்க வழக்கத்தின் காரணமாக சிறுதானியங்களுக்கு ஏற்பட்டுள்ள முக்கியத்துவத்தையும் நகர்ப்புறங்களில் அதற்கு ஏற்பட்டுள்ள அதிகப்படியான தேவைகளையும் கருத்தில் கொண்டு வேளாண் பெருமக்கள் சிறுதானிய பயிர்களை விளைவிப்பதன் மூலம் அதிகப்படியான வருவாயை பெற முடியும் என்று தெரிவித்தார்.

பின்னர் பருத்தி ஆராய்ச்சி நிலையத்தின் முதன்மை விஞ்ஞானி முனைவர் ரத்தினவேல் பேசுகையில் :-

கம்பு, சோளம், வரகு, சாமை, திணை, குதிரைவாலி, பனிவரகு, கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானியங்களின் வகைகள் மற்றும் பயன்கள் குறித்து பள்ளி குழந்தைகளுக்கு விளக்கினார்.

இறுதியாக சிறுதானியங்களில் செய்யப்பட்ட பிஸ்கட், உணவுகள் பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. மேலும், இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைத்து பள்ளிக் குழந்தைகளுக்கும், வேளாண் விவசாயிகளுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.



இந்த நிகழ்ச்சியில் வேளாண் விரிவாக்கத்துறை முதன்மை விஞ்ஞானி உஷாராணி, வேளாண் பூச்சியியல் துறை முதன்மை விஞ்ஞானி ரமேஷ் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...