தந்தை பெரியார் 143வது பிறந்தநாள்: கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் துறை அலுவலர்கள், பணியாளர்கள் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு..!

சமூக நீதியே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த சமூக நீதி நாளில் உறுதி ஏற்கின்றேன் என அரசு ஊழியர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.



கோவை: தந்தை பெரியார் பிறந்த தினத்தை சமூக நீதி நாளாக அறிவித்ததைத் தொடர்ந்து அவரது 143வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றனர்.

தமிழக அரசு பெரியார் பிறந்தநாளை சமூக நீதி நாளாக சட்டபேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்ததை தொடர்ந்து, இன்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும், அரசு அலுவலகங்களிலும் சமூக நீதி நாள் உறுதி மொழி ஏற்றனர்.

அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில், அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் சமூக நீதி உறுதி மொழி ஏற்றனர்.



கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், சமூக நீதி நாள் உறுதி ஏற்பு வாசகங்களை வாசிக்க, கூடியிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.



சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை நான் ஒப்படைத்துக் கொள்வேன் என்றும் மானுட பற்றும் மனிதாபிமானமும் ஒன்றே எனது ரத்த ஓட்டமாக அமையும் எனவும் சமூக நீதியே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த சமூக நீதி நாளில் உறுதி ஏற்கின்றேன் என அரசு ஊழியர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.





Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...