கோவையில் பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்..!

இதயதெய்வம் மாளிகையில், அதிமுக கொடியேற்றி வைத்து அலங்கரித்து வைக்கப்பட்ட பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தனர்.


கோவை: கோவையில் பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.



கோவை அதிமுக மாநகர் மாவட்ட செயலாளரும், கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் கே. அர்ஜுனன் மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர். ஜெயராமன் ஆகியோர் தலைமையில் கோவை அவினாசி சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா திருவுருவ சிலைக்கு மாலையிட்டு மரியாதை செய்யப்பட்டது.



மேலும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித்தலைவி அம்மா திருவுருவ சிலைகளுக்கும் மாலையிட்டு மரியாதை செய்யப்பட்டது.



அதனைத் தொடர்ந்து, கோவை அதிமுக தலைமை அலுவலகமான இதயதெய்வம் மாளிகையில், அதிமுக கொடியேற்றி வைத்து அலங்கரித்து வைக்கப்பட்ட பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தனர்.



மேலும், கலந்துகொண்டவர்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி சிறப்பித்தனர். இதில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள், உட்பட பொதுமக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டு பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செய்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...