கோவையில் நடப்பு ஆண்டில் பதிவான 951 இறப்புகளில் 480க்கும் மேலான இறப்புகள் தற்கொலைகள் - மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் 24 மணி நேரமும் செயல்படக் கூடிய "விடியல்" என்ற ஆலோசனை மையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் துவக்கி வைத்தார்.


கோவை: கோவை மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் பதிவான 951 இறப்புகளில் 480க்கும் மேலான இறப்புகள் தற்கொலைகள் செய்யப்பட்டு உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் தெரிவித்துள்ளார்.



தற்கொலை எண்ணங்களைத் தடுப்பது, மன அழுத்தங்களை போக்குவதற்காக கோவை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல்துறை சார்பில் 24 மணி நேரம் செயல்படக் கூடிய "விடியல்" என்ற ஆலோசனை மையம் துவங்கப்பட்டுள்ளது.



இந்நிலையில், மாவட்ட கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் இதில் கலந்து கொண்டு அம்மையத்தில் பணிபுரிய கூடிய காவலர் ஒருவரை கொண்டு திறந்தார். இது அங்குள்ள அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.



அதனை தொடர்ந்து, கோவை மாநகர சைபர் கிரைம் சார்பில் எடுக்கப்பட்ட குறும்படத்தை வெளியிட்டு ஆலோசனை மையத்தில் பணிபுரிய இருக்கும் மன நல மருத்துவர் ஆலோசகர், காவலர்கள் ஆகியோருக்கு விடியல் என்ற நினைவுப் பரிசினை வழங்கினார்.



பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம், கோவை மாவட்டத்தில் பதியப்பட்ட இறப்பு வழக்குகளில் தற்கொலைகளே அதிகமாக உள்ளதாக தெரிவித்தார்.



கடந்த ஐந்தரை ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட திறப்பு வழக்குகளில் தற்கொலைகளே முக்கியமானதாக உள்ளது. இந்த ஆண்டில் இதுவரை 959 வழக்குகள் பதியப்பட்டது. அதில் 480 வழக்குகளுக்கு மேல் தற்கொலைகளே உள்ளன என்றார்.

அதுமட்டுமின்றி கடந்த இரண்டு வருடங்களில் தான் தற்கொலையின் சதவிகிதம் அதிகரித்துள்ளதாக கூறிய அவர், இதற்கான ஆய்வு நடத்தியதில் குடும்ப பிரச்சினையே அதிகப்படியான காரணமாக இருப்பதாக தகவல்கள் வந்துள்ளதாக கூறினார்.

எனவே, இந்த தற்கொலை எண்ணங்களைத் தடுக்கும் விதமாகவும், பல்வேறு உதவிகளை புரியும் விதமாகவும் கோவை மாவட்ட காவல்துறை சார்பில் விடியல் என்ற இருபத்தி நான்கு மணி நேர தொலைபேசி ஆலோசனை மைய சேவையை ஏற்படுத்தி உள்ளதாக கூறினார்.

இந்த ஆலோசனை மையத்தை 0422-2300999 என்ற எண் மூலம் தொடர்பு கொள்ளலாம் அல்லது 7708100100 என்ற வாட்ஸ்அப் எண் மூலமும் காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100 மூலமும் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

மேலும், இதனை தொடர்புகொண்டு பிரச்சனைகளைக் கூறினால் கட்டுப்பாட்டு அறையில் உள்ள காவலர்கள் தகுந்த ஆலோசர்களை பரிந்துரை செய்வர் என்று தெரிவித்த அவர், இந்த ஆலோசனை மையம் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் நடைபெறும் எனவும் இதற்காக 50 ஆலோசகர்களை நியமித்து உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...