ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரியில் 31-வது விளக்கேற்றும் விழா கொண்டாட்டம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி, தனது 31வது விளக்கேற்றும் விழாவை, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஸ்ரீமதி.வேலுமணியம்மாள் நினைவரங்கத்தில் கொண்டாடியது. இவ்விழாவில் கல்லூரி முதல்வர் மருத்துவர் டி.நிர்மலா, வரவேற்புரையாற்றி துவக்கிவைத்தார். 

கே.எம்.சி.எச் செவிலியர் கல்லூரி முதல்வர் மருத்தவர் எஸ்.மாதவி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் துணை நிர்வாக அறங்காவலர் ஸ்ரீ.து.லக்ஷ்மிநாராயணஸ்வாமி இவ்விழாவிற்கு தலைமை வகித்தார்.



இதைத்தொடர்ந்து, முதலாம் ஆண்டு செவிலியர் மாணவர்கள் அகல் விளக்கேற்றி பிளாரன்ஸ் நைட்டிங்கேல் காட்டிய வழியை பின்பற்ற உறுதிமொழி எடுத்தனர். தொடர்ந்து, கல்லூரியின் துணை முதல்வர் பேராசிரியை எஸ்.கிரிஜாகுமாரி பிளாரன்ஸ் நைட்டிங்கேல் உறுதிமொழியை வாசிக்க, மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர். துணைபேராசிரியை வி.பிருந்தா நன்றியுரையுடன் விழாவினை நிறைவுசெய்தார்.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...