தந்தை பெரியார் பிறந்த நாள் சமூகநீதி நாளாக அறிவிப்பு-சுந்தராபுரத்தில் தி.மு.கவினர் இனிப்பு வழங்கி மகிழ்ச்சி.!!

கோவை: தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17-ஆம் தேதி சமூக நீதி நாளாகக் கொண்டாடச் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தற்கு பல்வேறு தரப்பினர் மகிழ்ச்சி தெரிவித்துக் கொண்டாடி வருகின்றனர்.


கோவை: தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17-ஆம் தேதி சமூக நீதி நாளாகக் கொண்டாடச் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தற்கு பல்வேறு தரப்பினர் மகிழ்ச்சி தெரிவித்துக் கொண்டாடி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாகக் கோவை மாவட்டம் குறிச்சி பகுதியில் தந்தை பெரியாரின் பிறந்த நாளை சமூக நீதியாகக் கொண்டாட முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்ததற்கு திமுகவினர் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.



குறிச்சி பகுதியில் உள்ள பெரியார் திருவுருவச் சிலைக்குக் கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் குறிச்சி பிரபாகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில், திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநிலச் செயலாளர் உமாபதி, குறிச்சி பகுதி பொறுப்பாளர் கார்த்திகேயன், தமிழ்நாடு திராவிடர் கழகத் தலைவர் நாகராஜன், திராவிட கழகம் சார்பில் சிற்றரசு, சந்திரசேகர், மகேந்திரன், மதிமுக மாநில இளைஞரணிச் செயலாளர் ஈஸ்வரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...