வால்பாறையில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரிப்பு- மக்கள் அச்சம்.!!

கோவை: வால்பாறையில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் மக்களிடையே அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.


கோவை: வால்பாறையில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் மக்களிடையே அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த சில மாதங்களாக காமராஜ் நகர், கக்கன் காலனி, சிறுவர் பூங்கா, அண்ணா நகர், எம்ஜிஆர் நகர், வாழைத்தோட்டம் ஆகிய பகுதிகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.



இச்சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், இதைத்தொடர்ந்து வனத்துறையினர் வாழைத்தோட்டம் பகுதியில் இரண்டு இடங்களில் கூண்டு வைத்து சிறுத்தையைப் பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

இருப்பினும், சிறுத்தைகள் கூண்டில் சிக்காமல் வனத்துறைக்குப் போக்கு காட்டி வருகின்றது. இந்நிலையில், வால்பாறையின் பேருந்து நிலையம் உள்ள காந்தி சிலை அருகில் உள்ள ஆரம்பச் சுகாதார நிலையம் எதிரில் 3-சிறுத்தைகள் நடமாடிய காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஆனைமலை புலிகள் காப்பக தலைமையிடத்து உதவி வனப்பாதுகாவலர் பிரசாந் ஐஎப்எஸ்.உதவி வனப்பாதுகாவலர் செல்வம், வனத்துறை மருத்துவர் மனோகரன், ஆணையாளர் ரமேஷ், வட்டாட்சியர் ராஜா வச்சரகர்கள், ஜெயச்சந்திரன், மணிகன்டன், வனவர்கள் வனத்துறையினர் சிறுத்தைகள் சில தினங்களுக்கு முன் நடமாடிய அரசு ஆரம்பச் சுகாதார நிலைய பகுதிகளை ஆய்வு மேற்கொண்டனர்.

இந்நிலையில், வால்பாறை மத்திய பகுதியான நகைக் கடை வீதியில் கடந்த சில தினங்களாக சிறுத்தை நடமாட்டம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இப்பகுதியில் தபால் நிலையம், காவல் நிலையம் தொலைப்பேசி நிலையம் அரசு மருத்துவமனை மேல்நிலைப்பள்ளி மற்றும் மார்க்கெட் வளாகங்கள் குடியிருப்புகள் உள்ளன.

இப்பகுதியில், இரவு 10-மணி முதல் அதிகாலை 3-மணி வரை சிறுத்தைகள் நடமாட்டம் தென்படுவது வழக்கமாக உள்ளது. வால்பாறை நகரின் பல பகுதிகளில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. மக்களிடையே அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...