திருப்பூர்: திருப்பூரில் அரசுப் பள்ளி ஆசிரியைக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அரசுப் பள்ளியில் பணியாற்றிய சக ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

திருப்பூர் நெசவாளர் காலனி பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி கடந்த 1ம் தேதி வகுப்புகள் நடைபெற்று வரக்கூடிய சூழ்நிலையில், ஒன்றாம் தேதி பள்ளிக்கு வந்த 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு தமிழ் பாடமெடுக்கும் ஆசிரியைக்கு காய்ச்சல் இருந்தது.
இதையடுத்து, சக ஆசிரியர்கள் உதவியுடன் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், நேற்றைய தினம் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து, இன்று பள்ளி முழுவதும் கிருமிநாசினி மூலம் சுகாதாரப் பணி மேற்கொள்ளப்பட்டு, ஆசிரியர் வந்து சென்ற ஓய்வறை அடைக்கப்பட்டு, பள்ளியில் உள்ள சக ஆசிரியர் ஆசிரியைகளுக்கும் சுகாதாரத்துறை மூலம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.