கோவை: கோவை காரமடை அடுத்த கன்னார்பாளையம் பகுதியில் பணத்தை கொடுத்து வாங்கிய இலவச வீட்டுமனை பட்டாக்களை ரத்து செய்யக் கோரி 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் அவர்கள் அளித்த மனுவில்,
கடந்த மாதம் காரமடை கிராமம் எத்தப்ப நகரில் 90 இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. எங்கள் ஊரைச் சேர்ந்த 20 நபர்களுக்கு பட்ட வழங்கப்பட்டிருந்த நிலையில் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர்.
இவர்கள் சுமித்ரா என்பவர் மூலம் பணம் கொடுத்து ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் பட்டா பெற்றுள்ளனர். பட்டா வேண்டும் என்றால், அதற்கு 25,000 ரூபாய் தர வேண்டுமென கூறியதால் எங்களில் பலராலும் பணத்தை அளிக்க இயலவில்லை.

இந்நிலையில், எங்கள் விண்ணப்பங்களை தள்ளுபடி செய்து விட்டு எங்களுக்காக அளிக்கப்பட்ட பட்டாக்களை வெளியூர்காரர்கள் போன்ற பலருக்கு 25,000 ரூபாய் வாங்கி கொண்டு அளித்துவிட்டார். ஒரு நபருக்கே 2, 3 பட்டாக்களை வழங்கியுள்ளார். இது அரசை ஏமாற்றி நடந்த செயல். இதனால் பணம் இல்லாமல் தவிக்கும் எங்கள் பலருக்கும் அரசு வழங்க கூடிய இலவச வீட்டுமனை பட்டா வந்தடையவில்லை.
எனவே, பணம் அளித்து முறைகேடாக வழங்கப்பட்ட பட்டாக்களை ரத்து செய்து எங்களுக்கு பட்டா வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். முறைகேடு செய்த சுமித்ரா மற்றும் அவரது கணவர் வடிவேல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும், இது போன்ற அரசு துறை சார்ந்த ஊழியர்கள் செய்யும் முறைகேடுகள் திமுக ஆட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்று குறிப்பிட்டிருந்தனர்.