கோவை: 4-ரிசர்வ் சைட் இடங்களை ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்த இடத்தில் கோவை மாநகராட்சி சார்பாக அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது.
கோவை: 4-ரிசர்வ் சைட் இடங்களை ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்த இடத்தில் கோவை மாநகராட்சி சார்பாக அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.18 விமல் நகரில் உள்ள பூங்கா மற்றும் OHT(கிணறு) 23 சென்ட், வடவள்ளி எம்.ஜி.நகரில் உள்ள பூங்கா இடம் மற்றும் பள்ளக்கூட இடம் 27 சென்ட்.
மற்றும் வீரகேரளம் அலமேலு மங்கை நகரில் பொது பயன்பாட்டிற்கு விடப்பட்ட 10 சென்ட் (வணிக வளாக கட்டிடம் 7 கடைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது) ஆக மொத்தம் 78 சென்ட் விஸ்தீரணம் கொண்டு சுமார் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள 4 ரிசர்வ் சைட் இடங்களை ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்த இடத்தில் கோவை மாநகராட்சி செயற்பொறியாளர் எஸ்.ரவிச்சந்திரன் சார்பில் இன்று (28.08.2021) அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது.