கோவையில் அரசு மதுபானக்கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் பொதுமக்கள் புகார்.!!

கோவை: கோவையில் அரசு மதுபானக்கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் பொதுமக்கள் புகார் அளித்தனர்.


கோவை: கோவையில் அரசு மதுபானக்கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் பொதுமக்கள் புகார் அளித்தனர்.



கோவை வெள்ளலூர் பேரூராட்சி முன்னால் தலைவர் மருதாசலம் தலைமையில் 50க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் பகுதியில் அரசு மதுபான கடை திறப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த மருதாசலம் கூறியதாவது:-

திமுக அரசு பதவியேற்று 100-நாட்களில் கோவை வெள்ளலூர் மக்களுக்குப் பரிசளித்தது இரண்டு அரசு மதுபான கடைகளைத்தான். கடந்த 10-ஆண்டுகளுக்கு முன்பே இந்த பகுதியில் அரசு மதுபான கடை வரக்கூடாது என்று பஞ்சாயத்தில் முடிவெடுத்து அதன்படி கடந்த 10 ஆண்டுகளாக இந்தப்பகுதியில் மதுபான கடை இல்லாமல் மக்கள் நிம்மதியாக இருந்தார்கள்.

தற்பொழுது மக்கள் அதிகம் கூடும் கோவில்களுக்கு அருகிலும், பள்ளிக்கூடத்திற்கு அருகிலும் அரசு மதுபான கடை திறப்பது கண்டனத்திற்குரியது. மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு இதைத் தடுத்து நிறுத்தவேண்டும். இல்லை என்றால் எத்தனை வழக்குகள் போட்டாலும் உயிரே போனாலும் ஊர்மக்கள் அனைவரும் அரசு மதுபான கடை முன்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாகத் தெரிவித்தார்.

அதேபோல் முன்னால் வார்டு கவுன்சிலர் தமிழரசி கூறும்போது கடந்த 10 ஆண்டுகளாக இந்தப்பகுதியில் அரசு மதுபான கடை இல்லாமல் இருந்தது. தற்போது ஊருக்கு மத்தியில் மதுபான கடை திறப்பதைப் பொதுமக்கள் நாங்கள் அனுமதிக்கமாட்டோம்.

அரசு மக்களின் எதிர்பைமீறி அரசுமதுபானகடைகளை வெள்ளலூர் பகுதியில் திறந்தால் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் மேலும், மதுக்கடைகளைத் திறக்க நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என்று உறுதியுடன் கூறுவதாகத் தெரிவித்தனர்.

திடீரென மதுக்கடை திறக்கப்பட்டதால் ஆவேசமடைந்த மக்கள் அரசுமதுபானகடை முன்பாக கூடியதால் பரபரப்பானது அதனை தொடர்ந்து கடையை மதுபான கடை ஊழியர்கள் அடைத்தார்கள்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...