வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருவதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை ஒரு சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. வால்பாறைக்குக் கோவை திருச்சி, திருப்பூர், ஈரோடு, சென்னை, மதுரை உட்பட பல்வேறு ஊர்களிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வால்பாறைக்கு வந்து செல்கின்றனர்.
தமிழகம் மட்டுமின்றி கேரளா கர்நாடகா பாண்டிச்சேரி இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். கொரானா தொற்று காரணமாக வால்பாறைக்கு வரத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது வால்பாறையில் நல்ல சீதோஷண நிலை விளங்குவதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இன்று வால்பாறைக்கு வந்துள்ளனர். வால்பாறையில் முக்கிய சுற்றுலாத் தலமான கூழாங்கல் ஆற்றில் குளித்தும் செல்பி எடுத்தும் மகிழ்கின்றனர்.
பசுமை போர்த்திய தேயிலைத் தோட்டங்களில் குடும்பத்துடன் படமெடுத்து மகிழ்கின்றனர். இதன் காரணமாக வால்பாறையில் உள்ள உணவகங்கள் மற்றும் காட்டேஜ்களில் கூட்டம் நிரம்பி வழிகின்றன.

தள்ளுவண்டி மற்றும் நடைபாதை வியாபாரிகளுக்கும் வருமானம் இன்று அதிகரித்துள்ளது. இதன் காரணமாக வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.