ரேஷன் கடைகளில் இனியும் 2 ஜி வசதியுள்ள கருவியை பயன்படுத்தி வருவதால் காலதாமதம் - 4ஜி சேவைக்கு மாற்ற கோரிக்கை

கோவை: தற்போது,ன்கோவை ரேஷன்கடைகளில் பயன்படுத்தப்படும், 'பாயின்ட் ஆப் சேல்' கருவியில், 2ஜி பயன்பாடு தான் உள்ளது. இதனால் காலதாமதம் ஏற்படுவதாகவும், எனவே 4ஜி பயன்பாட்டுக்கு மாற்ற வேண்டும் என்று, ரேஷன் கடை பணியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


கோவை: தற்போது,ன்கோவை ரேஷன்கடைகளில் பயன்படுத்தப்படும், 'பாயின்ட் ஆப் சேல்' கருவியில், 2ஜி பயன்பாடு தான் உள்ளது. இதனால் காலதாமதம் ஏற்படுவதாகவும், எனவே 4ஜி பயன்பாட்டுக்கு மாற்ற வேண்டும் என்று, ரேஷன் கடை பணியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் முழுக்க, 1,401 ரேஷன் கடைகள் உள்ளன; 10 லட்சத்து 65,345 பயனாளிகள் உள்ளனர். இவர்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவு பொருட்கள், ரேஷன்கடைகள் வாயிலாக மாதந்தோறும் வினியோகிக்கப்படுகின்றன.

உணவுப்பொருட்கள் கடத்தலை தடுக்க, தமிழக அரசின் உணவுப்பொருள் வழங்கல் துறை விதிமுறைகளை வலுப்படுத்தியுள்ளது. அதனால், 'பயோமெட்ரிக்' பதிவு இல்லாமல் யாருக்கும் பொருட்களை வினியோகம் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.

வயதானவர்கள், நோயாளிகளுக்கு விதிவிலக்கு அளித்து, தாசில்தாரிடம் சான்று பெற்று வந்தால் குறிப்பிடும் நபர்களுக்கு விதிவிலக்கு அளித்து பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பொருட்கள் வினியோகம் நடந்து வரும் வேளையில், ஏராளமான மக்கள் ரேஷன் கடைகளில் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.

'பாயின்ட் ஆப்சேல்' கருவியில், 2ஜி இணைப்புக்கான வசதி மட்டுமே இருப்பதால், 4ஜி வசதியை கருவி ஏற்றுக்கொள்வதில்லை. அதனால் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள், ஸ்கேன் ஆவதில் தாமதம் ஏற்படுகிறது. அதற்குப்பின் பொருட்களை அளவு சரிபார்த்து வழங்குவதால், மேலும் தாமதம் ஏற்படுகிறது. இந்நிலையை தவிர்க்க, ரேஷன்கடைகளுக்கு கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட 'பாயின்ட் ஆப் சேல்' கருவியை மாற்றி, புதியதாக 4ஜி வசதியுள்ள இயந்திரங்களை வழங்க வேண்டும் என்று, ரேஷன் கடைப்பணியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது குறித்து, தமிழ்நாடு நியாயவிலைக்கடை பணியாளர் சங்க மாநில தலைவர் ராஜேந்திரன் கூறுகையதாவது:-

''நவீனத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் போது, இனியும் 2 ஜி வசதியுள்ள கருவியை பயன்படுத்தி வருகிறோம். இதனால் தான் காலதாமதம் ஏற்படுகிறது. இதை மாற்றினால், பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்,'' என்றார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...