கோவை: இந்தியன் வங்கி சார்பாக கோவையில் நடைபெற்ற கடன் வழங்கும் முகாமில் ஒரே நாளில் சிறு மற்றும் குறு நடுத்தர தொழில் முனைவோருக்கு 110 கோடி கடன் வழங்கியதாக இந்தியன் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியன் வங்கி சார்பில், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான கடன் முகாம், கோவை வெரைட்டி ஹால் ரோட்டில் உள்ள ஓட்டலில் நடந்தது.
இது குறித்து, சென்னை சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கடன் பிரிவு கார்ப்பரேட் அலுவலக பொது மேலாளர் சுதாகரராவ் கூறியதாவது:
கொரோனாவால், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் இந்தியன் வங்கி சார்பில் கடன் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. தொழில் நிறுவனங்களை கைதுாக்க மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறது. இதற்கான சிறப்பு நிதியையும் ஒதுக்கியுள்ளது. இந்த நிதியை தொழில் நிறுவனங்களுக்கு வழங்கவே, இம்முகாம்கள் நடத்தப்படுகின்றன.
கோவை, மதுரை, கிருஷ்ணகிரி, திருச்சி, சேலம், திருநெல்வேலி, கும்பகோணம், காரைக்குடி ஆகிய எட்டு மண்டலங்களில் முகாம்கள் மூலம், 110 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, ரூ.48 கோடி வணிக நிறுவனங்களுக்கான கடன் வழங்கப்பட்டுள்ளது, இவ்வாறு, அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், உதவி மண்டல மேலாளர் விஜய்குமார், வர்த்தக பொது மேலாளர் கணேஷ் ராமன், கொடிசியா தலைவர் ரமேஷ் பாபு, மண்டல மேலாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.