கோவை: நீலகிரி, கோவை, திருப்பூர், தென்காசி மாவட்டங்களுக்கு, மிக அதிக கன மழைக்கான, 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
வெப்பச் சலனம் காரணமாக, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார், திண்டுக்கல், நீலகிரி, தேனி, திருவண்ணாமலை, சேலம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்று சில இடங்களில் கன மழை பெய்யும். சென்னையின் சில இடங்களில் லேசான மழை பெய்யும்.
வளிமண்டலத்தில் ஈரப்பதத்துடன் கூடிய மேற்கு திசை காற்று வலுவடைகிறது.இதனால் நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் நாளை மிக கன மழை பெய்யும். விழுப்புரம், கடலுார், மயிலாடுதுறை மற்றும் புதுச்சேரியின் சில இடங்களில் கன மழை பெய்யும்.
நீலகிரி, கோவை, திருப்பூர், தென்காசி மாவட்டங்களில் 29-ம் தேதியும்; நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 30ம் தேதியும் மிக அதிக கன மழை பெய்யும். தேனி, விருதுநகர், துாத்துக்குடி, சேலம், ஈரோடு மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் 29ம் தேதியும்; திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், மதுரை, ஈரோடு, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் 30ம் தேதியும் கன மழை பெய்யும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மிக அதிக கன மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு, சென்னை வானிலை ஆய்வு மையம், 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுத்துள்ளது.