கோவை: பொள்ளாச்சி அருகே மனைவி பிரிந்து சென்றதால் வருத்தத்தில் கணவன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை தொடர்ந்து காவல்துறை விசாரணை செய்து வருகின்றனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள கரப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன்(55). இவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இவரது மனைவி பிரிந்து சென்றதாகத் தெரிகிறது. தன்னுடைய மனைவி பிரிந்து சென்ற வருத்தத்திலிருந்த ஈஸ்வரன், ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் மனமுடைந்து காணப்பட்ட அவர், நேற்று கரப்பாடியில் உள்ள அவரது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவல் அறிந்து அங்குச் சென்ற நெகமம் காவல்துறை உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகப் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.