பொள்ளாச்சி வேளாண் விரிவாக்க மையம் மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை இடமாற்றம் செய்யக் கூடாது -விவசாயிகள் வலியுறுத்தல்.!!

கோவை: பொள்ளாச்சி நகரில் உள்ள தெற்கு வேளாண் விரிவாக்க மையம் மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை இடமாற்றம் செய்யக் கூடாது என காணொளி வாயிலாக நடைபெற்ற முறையீட்டுக் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.


கோவை: பொள்ளாச்சி நகரில் உள்ள தெற்கு வேளாண் விரிவாக்க மையம் மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை இடமாற்றம் செய்யக் கூடாது என காணொளி வாயிலாக நடைபெற்ற முறையீட்டுக் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

கொரோனா பரவல் காரணமாக, கோவை மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் தற்போது, ஆன்லைன் வாயிலாக நடைபெற்று வருகிறது.



இன்று பொள்ளாச்சி தெற்கு வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் வடக்கு வேளாண்மை விரிவாக்க மையத்திலும், கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில், வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற்ற குறை தீர்ப்பு கூட்டத்தில், ஏராளமான விவசாயிகள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள், பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் கூறுகையில்,

பொள்ளாச்சி தெற்கு வேளாண் விரிவாக்க மைய கட்டிடம் பேருந்து நிலையத்துக்கு அருகில் இருப்பதால், சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள விவசாயிகள் எளிதில் வேளாண் அலுவலகத்தை அணுக முடிகிறது.

தற்போது, புதிய ஒன்றிய அலுவலக கட்டுமான பணிக்காகப் பழைய கட்டிடம் இடிக்கப்பட்ட நிலையில், ஒன்றிய அலுவலகத்தின் பின்பக்கம் செயல்படும் வேளாண் விரிவாக்கம் மையம் மற்றும் தோட்டக்கலைத் துறை அலுவலக கட்டடங்களையும் இடித்து இடம் மாற்ற அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

விவசாயிகளின் நலன் கருதி பொள்ளாச்சி தெற்கு வேளாண் விரிவாக்க மையம் மற்றும் தோட்டக்கலைத் துறை அலுவலகங்களை வேறு இடத்திற்கு மாற்றாமல் ஒன்றிய அலுவலக வளாகத்தில் செயல்பட அனுமதிக்க வேண்டும்.

மேலும் பொள்ளாச்சி பகுதியில் தென்னை சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது. பெரும்பாலான இடங்களில் வயதான தென்னை மரங்களை அகற்றி விட்டு புதிய தென்னங்கன்றுகளை நடவு செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆழியாறு தென்னை உற்பத்தி மையத்தில் உற்பத்தி செய்யப்படும் தென்னங்கன்றுகள் போதுமானதாக இல்லை. அதிகப்படியான, தென்னங்கன்று உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...