கோவை: ஈரோடு மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு ஈமு கோழிப்பண்ணை நடத்துவதாக கூறி கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து பொதுமக்களிடம் இருந்து லட்சக்கணக்கான பணத்தை பெற்று தலைமறைவான குற்றவாளிக்கு கோவை முதலீட்டாளர் நலன் நீதிமன்ற நீதிபதி 10 ஆண்டு சிறை தண்டனையும் 1 கோடியே 20 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் 2012- ம் ஆண்டு மதி ஈமு பார்ம்ஸ் என்ற பெயரில் ஈமு கோழி பண்ணை நிறுவனம் தொடங்கி பல்வேறு கவர்ச்சியான திட்டங்களை அறிவித்தனர். இதில், 51- முதலீட்டாளர்களிடம் இருந்து ரூபாய். 1,33,87,500 ரூபாய் பெற்றுக்கொண்டு ஏமாற்றிய உரிமையாளர், தலைமறைவானதாக அளிக்கபட்ட புகாரின் பேரில் பொருளாதார குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யபட்டு கோவை முதலீட்டாளர்கள் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.
இந்நிலையில், மதி ஈமு கோழி பண்ணை நடத்திய வந்த தங்கவேலு என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூபாய் 1 கோடியே 20 லட்சம் அபராதம் விதித்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவி இன்று தீர்ப்பு வழங்கினார். மேலும், இந்த வழக்கில் சேர்க்கப்பட்டிருந்த தனசேகரன் என்பவரை விடுதலை செய்தும் தீர்ப்பு அளித்தார்.