கன்னியாகுமரி முதல் ராஜ்கோட் வரை சி.ஆர்.பி.எப். வீரர்கள் சைக்கிள் பேரணி.!!

கோவை: 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விதமாக கன்னியாகுமரி முதல் ராஜ்கோட் வரை சி.ஆர்.பி.எப். வீரர்கள் சைக்கிள் பேரணி நடைப்பெற்றது.


கோவை: 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விதமாக கன்னியாகுமரி முதல் ராஜ்கோட் வரை சி.ஆர்.பி.எப். வீரர்கள் சைக்கிள் பேரணி நடைப்பெற்றது.



திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் சி.ஆர்.பி.எஃப் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. நாட்டின் 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விதமாகக் கன்னியாகுமரி முதல் ராஜ் கோட் வரை மத்திய ரிசர்வ் காவல்துறை படை சார்பில் 15-வீரர்கள் சுமார் 2500-கிலோமீட்டர் சைக்கிள் பேரணி கடந்த 22-ஆம் தேதி கன்னியாகுமரியில் துவங்கி ராஜ் கோட்டில் அக்டோபர் 2ம்-தேதி முடிவடைய உள்ளது.



இந்நிலையில் நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், மதுரை, திண்டுக்கல் வழியாக சுமார் 450-கிலோ மீட்டர் கடந்து மாலை திருப்பூர் மாவட்டம் அவினாசி பாளையம் ஜெய் ஸ்ரீராம் கல்லூரிக்கு வந்தடைந்தது.



இந்நிலையில், சைக்கிள் பேரணிக்குப் பொதுமக்கள் மற்றும் கலைத்துறை, விளையாட்டுத்துறையைச் சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள், காவல்துறையினர் என ஏராளமானோர் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

முன்னதாக வீரர்களை வரவேற்கும் விதமாக கேக் வெட்டியும், நினைவுப் பரிசு மற்றும் பொன்னாடை அணிவித்தும் கவுரவிக்கப்பட்டது. பின்னர் ஐ.எம்.ஜி.கே.ஏ கராத்தே அமைப்பு சார்பில் தற்காப்பு செயல்முறை விளக்கம், கும்மியாட்டம், சிலம்பாட்டம் எனக் கலை நிகழ்ச்சிகளுடன் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மத்திய ரிசர்வ் காவல்துறை கமாண்டர் எம்.டி. பயாஸ், மற்றும் ஆய்வாளர் ஐயப்பன், பல்லடம் துணை கண்காணிப்பாளர் வெற்றி செல்வன், காட்டூர் பஞ்சாயத்துத் தலைவர் கோபால் மற்றும் கே.எஸ்.கே. பவுண்டேஷன் நிறுவனர் சம்பத்குமார் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...