கோவையில் 300-கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்.!! 29-பேர் அதிரடியாக கைது.!!

கோவை: கோவை மாநகர் 15-காவல்நிலையங்களில் 300-கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு 29-பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கோவை: கோவை மாநகர் 15-காவல்நிலையங்களில் 300-கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு 29-பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை மாநகர் உட்பட்ட பகுதியில் 15-காவல் நிலையங்கள் உள்ளன. காவல்துறை அதிரடியாக நேற்று முழுவதும் 15-காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் சோதனை செய்தனர். இதில் 300-கிலோ 3000-புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு 29-பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை மாநகர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஆர்.எஸ். புரம், காட்டூர், போத்தனூர், உக்கடம், குனியமுத்தூர், ரேஸ்கோர்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் காவல்துறை நேற்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த29-பேரை காவல்துறை கைது செய்தனர். மேலும் கடைகளிலிருந்து 3-ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை காவல்துறை பறிமுதல் செய்தனர்.

இவை மொத்தம் 300-கிலோவாகும். இதுபோல் சிங்காநல்லூர் சரவணம்பட்டி ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 5-பேரை காவல்துறை கைது செய்து அவர்களிடமிருந்து 30-மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...