திருப்பூர்: வருடத்திற்கு இரண்டு முறை மட்டுமே வரும் பூஜ்ஜிய நிழல் தினம் உடுமலையில் கலிலியோ அறிவியல் கழகம் சார்பில் உற்றுநோக்கப்பட்டது.

இன்று மதியம் சரியாக 12.24 மணியளவில் சூரியனின் நிழலானது சரியாக நேர்க்குத்தாக கீழே விழுந்தது.
ஒரு வருடத்தின் இரண்டு நாட்களில் மட்டுமே பொருளின் நிழல் ஆனது அப்பொருளுக்கு மிகச்சரியாக கீழே விழுவதால் நம்மால் அப்பொருளின் நிழலை உச்சி மதியவேளையில் காண இயலாது. அந்த நாட்கள் நிழல் காண இயலா நாள் அல்லது பூஜ்ஜிய நிழல் நாள் என்று அழைக்கப்படுகிறது. சூரியனை வைத்து பல்வேறு பொருட்களின் நிழலின் நீளங்களை உற்று நோக்குவது என்பது சிறந்த கற்றல் அனுபவமாகவும், மகிழ்வான செயல்பாடாகவும் இருக்கும்.
இந்த நாளை உற்று நோக்குவதன் மூலம் நம்மால் சூரியனின் இயக்கம், பூமியின் ஆரம், பூமியின் நேரம் நாம் இருக்கக்கூடிய இடத்தின் அட்சரேகை அமைப்பு ஆகியவற்றை கண்டறியலாம். மேலும் 2000 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாளில் தான் பூமியின் விட்டத்தை கண்டுபிடித்து உள்ளனர்.
இதுபோன்ற அரிய வானியல் நிகழ்வுகளை உற்று நோக்குவதால் அறிவியல் மனப்பான்மையும் ஆராய்ச்சி சிந்தனையும் குழந்தைகளிடம் வளர்க்க முடியும். இன்று உடுமலை பகுதிகளில் பல்வேறு இடங்களில் மாணவர்கள் இந்த அரிய நிகழ்வினை உற்றுநோக்கி கலிலியோ அறிவியல் கழகத்திற்கு புகைப்படங்களை அனுப்பி உள்ளனர். அவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் அனுப்பி வைக்கப்பட உள்ளது.