உடுமலையில் கேஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்!

திருப்பூர்: கேஸ் சிலிண்டர் விலை, பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி உடுமலையில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: கேஸ் சிலிண்டர் விலை, பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உடுமலையில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



பொதுமக்களை பாதிக்கும் கேஸ் சிலிண்டர் விலை உயர்வை குறைக்க வேண்டும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை தடுக்க வேண்டும், பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசியை தடையில்லாமல் வழங்க வேண்டும், தங்கம்மாள் ஓடை பகுதியில் நடைபெறும் சாலை பராமரிப்பை விரைந்து முடிக்க வேண்டும், உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் திருப்பூர் மாவட்டம் உடுமலை தலைமை தபால் நிலையம் முன்பாக மத்திய அரசை கண்டித்து இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



முன்னதாக, குட்டை திடலில் முன்பாக இருந்து சிலிண்டரை பாடையில் கட்டி ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்திற்கு தூக்கி வந்து, ஒப்பாரி வைத்து தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் மூர்த்தி, அமைப்பு சாரா தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் குணசேகரன், தமிழர் பண்பாட்டுப்பேரவை பால்நாராயணன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...