பொள்ளாச்சி அருகே கோட்டூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் - கோவை, திருப்பூர் மாவட்ட விவசாயிகள் பங்கேற்பு!

கோவை: கோவை பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கோவை, திருப்பூர் மாவட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.


கோவை: கோவை பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கோவை, திருப்பூர் மாவட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.



தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் அமைப்பு நிலை ஆலோசனைக் கூட்டம் கோட்டூரில் நேற்று (ஆகஸ்ட் 22) நடைபெற்றது. மாவட்ட தலைவர் சு.பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் விவசாய நிலங்களில் அதிகளவில் வனவிலங்குகளின் நடமாட்டம் உள்ளது.

குறிப்பாக காட்டுப்பன்றி, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் விவசாய தோட்டங்களில் புகுந்து விவசாயிகளைத் தாக்குவதும், பயிர்களை சேதப்படுத்தும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் வன விலங்குகள் தாக்கி விவசாயிகள் இறந்தால் ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படுகிறது.



அதேபோல், தமிழகத்தில் வன விலங்குகள் தாக்கி உயிரிழக்கும் விவசாயிகளுக்கு ரூ.10 லட்சம் நிவாரண தொகை வழங்க வேண்டும். வன எல்லைகளில், கால்நடைகள் மேய்ச்சலுக்கு வனத்துறை சார்பில் அனுமதி சீட்டு வழங்க வேண்டும். ஆனைமலையாறு நல்லாறு திட்டம் பல ஆண்டுகளாக செயல்படுத்தப்படாமல் உள்ளது. தமிழக அரசு இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

மேலும், கூட்டத்தில் விவசாயத்திற்கு தனி பட்ஜெட் அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...