வால்பாறை அருகே மரத்தின் மீது ஏறி கீழே இறங்க முடியாமல் தவிக்கும் கரடி - காப்பாற்றும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரம்!

கோவை: வால்பாறை அருகே மரத்தின் மீது ஏறி கீழே இறங்க முடியாமல் தவித்து வரும் கரடியை காப்பாற்ற வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: வால்பாறை அருகே மரத்தின் மீது ஏறி கீழே இறங்க முடியாமல் தவித்து வரும் கரடியை காப்பாற்ற வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் சில தினங்களாக கரடிகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கரடி வில்லானி எஸ்டேட் பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளி ஒருவரை தாக்கி கொன்றது.

அதன்பிறகு, ஐயர்பாடி எஸ்டேட் பகுதியில் வீட்டிற்கு நடந்து சென்ற வாலிபரை கரடி தாக்கி படுகாயம் ஏற்படுத்தியது. இவ்வாறு பல்வேறு பகுதிகளில் கரடி நடமாட்டம் கண்டறியப்பட்டு வருகிறது கரடி நடமாட்டம் உள்ளதால் வனத்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

இந்த நிலையில், வால்பாறை அருகே இன்று வாட்டர்ஃபால் எஸ்டேட் பகுதியில் தேயிலை தோட்டத்தில் கரடி ஒன்று மரத்தின் மீது ஏறி நின்று சத்தம் போடுவதை அப்பகுதி பொதுமக்கள் பார்த்துள்ளனர்.



சில மணி நேரங்களாக மரத்தில் கரடி இருப்பதை கவனித்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்து, வனத்துறையினர் அப்பகுதிக்கு வந்து பார்த்ததில் கரடி மரத்தின் மீது ஏறி அதன் கை மரத்தின் கிளையில் மாட்டிக்கொண்டதால் கரடி கீழே இறங்க முடியாமல் தவிப்பது தெரியவந்தது.



பின்னர், வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு கரடியே மரத்திலிருந்து காப்பாற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மரத்தின் கீழ் தேயிலைத் தோட்டத்தில் மேலும் இரண்டு கரடிகள் சுற்றி வருவதால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.

மேலும், பொதுமக்களை கரடியை அருகில் செல்லாமல் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...