கோவையில் கொரோனா விதி முறைகளை பின்பற்றி தயார் நிலையில் திரையரங்குகள்..!

கோவை: தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் நிலை காரணமாக கடந்த 3 மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை தமிழக அரசு திரையரங்குகள் திறப்பதற்கான அனுமதியக் அளித்ததுடன், அதற்கான கட்டுப்பாட்டு விதிகளையும் அறிவித்திருந்தது.


கோவை: தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் நிலை காரணமாக கடந்த 3 மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை தமிழக அரசு திரையரங்குகள் திறப்பதற்கான அனுமதியக் அளித்ததுடன், அதற்கான கட்டுப்பாட்டு விதிகளையும் அறிவித்திருந்தது.

அதன்படி, கோவையில் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் இருக்கைகளை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, படம் பார்க்க வரும் வாடிக்கையாளர்களை சமூக இடைவெளி விட்டு அமரும் விதமாக இருக்கைகளில் குறியீடுகள் அமைப்பது, கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.



இதுகுறித்து, கோவை பாபா காம்ப்ளக்ஸ் தியேட்டர் உரிமையாளர் பாலசுப்ரமணியம் கூறும்போது, கடந்த ஆண்டிலிருந்து கொரோனா பரவல் காரணமாக 18 மாதங்களாக திறையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில், இரண்டாம் அலை பரவல் காரணமாக, கடந்த 3 மாதங்கள் மூடப்பட்டு பல கோடி ரூபாய் நஷ்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அரசின் அனுமதிக்காக, திரையரங்கு உரிமையாளர்கள் காத்திருந்த நிலையில், அனுமதி அளித்து அரசின் உத்தரவின்படி, பணியாளர்களை கொண்டு திரையரங்கு முழுவதும் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டதாக தெரிவித்தார். மேலும், படம் பார்க்க வரும் வாடிக்கையாளர்களிடம் முக கவசம் அணிவது, சமூக இடைவெளி பின்பற்றுவது மற்றும் தடுப்பூசி போட்டு கொண்டதற்கான சான்றிதழ்கள் போன்றவற்றை சரி பார்ப்பது என பாதுகாப்பு நடவடிக்கைககளில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தார்.



மேலும், திரையரங்கு டிக்கெட் கட்டணம் என்பது உயர்த்தபடாது என தெரிவித்த, பாலசுப்ரமணியம் அரசு அறிவுறுத்திய கட்டுப்பாட்டு விதிமுறைகள் முழுமையாக கடைபிடிக்கப்படும்

என்றார். மேலும், கொரோனா அலை பரவல் காரணமாக நஷ்டத்தை சந்தித்துள்ள திரையரங்கு உரிமையாளர்கள் தமிழக அரசு புதிதாக விதித்துள்ள வரி மற்றும் கேளிக்கை வரி உள்ளிட்ட வரிகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...