கோவையில் ரோட்டரி கிளப்பின் புதிய கிளை ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் நியூ ஜென் துவக்க விழா..!

கோவை: கோவையில் இன்று மாலை ரோட்டரி கிளப்பின் புதிய கிளை ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் நியூ ஜென் துவக்க விழா நடைபெற்றது.



கோவை: கோவையில் இன்று மாலை ரோட்டரி கிளப்பின் புதிய கிளை ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் நியூ ஜென் துவக்க விழா நடைபெற்றது.

இந்த துவக்க விழா கோவை காந்திபுரம் ஹரி டெஜன் நட்சத்திர ஓட்டலில் வைத்து நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு உதவி கவர்னர் கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். ரோட்டரி கிளப்பின் முக்கிய நிர்வாகிகள் சி.ஜி.குமார், தியாகராஜன், குமரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரோட்டரயன் மணி மற்றும் சித்ரா நன்றியுரை வழங்கினார்.

ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் நியூ ஜென் துவக்க விழாவில் ரோட்டரியன் நாக சந்தோஷ் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். செயலாளராக ரோட்டர யன் மணிராஜ்குமார் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, இந்நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் சார்பாக வரும் காலங்களில் எவ்வாறு செயல்படுவது மக்களுக்கு தேவையான உதவிகளை சமூக சேவைகளை தொடர்ந்து செய்வது, சுகாதாரம் சம்பந்தமான மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது, கிராமப்புற மக்களை சென்று சந்தித்து அவர்களுக்கு வேண்டிய புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து அவர்களை உற்சாகப் படுத்துவது என இந்த ஆண்டு ரோட்டரி கிளப் கோயம்புத்தூர் நீயூஜென் சார்பாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்த இருப்பதாக தெரிவித்தனர்.



இதில் ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் நியூ ஜென் குடும்பத்தார் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். ரோட்டரி கிளப்பிலேயே தற்போது துவங்கப்பட்டுள்ள இந்த ரோட்டரி கிளப் மட்டுமே இளைஞர்கள் நிறைந்ததாக கூறப்படுகிறது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...