கோவை குனியமுத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு வாலிபர்கள் கைது..!

கோவை: கோவை குனியமுத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை குனியமுத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

கோவையில் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் போதைப்பொருட்கள், போதை மாத்திரைகள், சூதாட்டம் உட்பட பல்வேறு சட்டவிரோத செயலில் நடைபெற்று வருகிறது. இதனை தடுப்பதற்காக மாநகர போலீசார் பல்வேறு தனிப்படைகளை அமைத்து நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இந்த நிலையில், கோவை குனியமுத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்ய செய்து கொண்டிருந்த இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை குனியமுத்தூர் போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் சின்னராஜ் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது இடையர்பாளையம் மணல் மார்க்கெட் பின் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் 2 பேர் நின்று கொண்டிருந்தனர்.

இதையடுத்து, அவர்களை பிடித்து போலீசார் சோதனை நடத்தினர். அவர்களிடம் கஞ்சா பொட்டலங்கள் விற்பனைக்கு இருந்தது தெரிய வந்தது.



தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியைச் சேர்ந்த அமானுல்லா என்பவரின் மகன் ஜோன்சா (36) மற்றும் அப்துல்லா என்பவரின் மகன் ஹக்கீம் (45) என்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அவர்களிடம் இருந்து 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...