திருப்பூர்: கரூரில் இருந்து கோவை செல்லும் போது பல்லடம் அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த எச்சரிக்கை கம்பத்தில் மோதிய விபத்தில் 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை பனப்பாளையம் அருகே இன்று அதிகாலை கரூரிலிருந்து கோவை நோக்கி 11 பேருடன் சென்ற ரெனால்ட் லோஜ்ஜி கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோர எச்சரிக்கை கம்பத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் கார் முற்றிலும் சேதமடைந்தது.

இந்த விபத்தில் காரில் பயணித்த 1 சிறுமி, 4 ஆண்கள், 4 பெண்கள் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடம் விரைந்து சென்ற பல்லடம் போலீசார் காருக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின் கோவை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் கோவை கணபதியைச் சேர்ந்த விஜயராஜ், ஆறுமுகம் மற்றும் குடும்பத்தினர் கரூர் மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வீரப்பூருக்கு உறவினர் வீட்டு நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஒரு கார் மற்றும் பேருந்து மூலமாக நேற்று காலை சென்றுள்ளனர். பின்னர், நேற்று மாலை உறவினர் வீட்டு விசேஷங்கள் முடிவடைந்த நிலையில் விடியற்காலை ஒரு மணி அளவில் ரெனால்ட் லோட்ஜி என்ற சொகுசு காரில் விஜயராஜ் காரை ஓட்ட அவருடன் 10 பேரும் ஊருக்கு திரும்பியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, பல்லடம் மாதப்பூர் பகுதியில் தேநீர் அருந்தி விட்டு விஜயராஜ் பதிலாக ஆறுமுகம் என்பவர் காரை இயக்கியுள்ளார். இதைத்தொடர்ந்து கார் மாதப்பூரிலிருந்து பனப்பாளையத்தை கடந்தபோது ஓட்டுனர் ஆறுமுகத்தின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் நடப்பட்டிருந்த எச்சரிக்கை கம்பம் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதும் அதில் பயணம் செய்த சத்திய பிரியா, சபரீஸ்வரன், செல்வம், சாந்தி, முருகேஸ்வரி, பரமசிவம், தன்சிகா உள்ளிட்ட 9 பேர் படுகாயம் அடைந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக எந்த ஒரு உயிர் சேதமும் ஏற்படவில்லை. பல்லடம் அருகே இன்று அதிகாலை நடந்த கார் கவிழ்ந்த விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.