திருப்பூர் மாநகர காவல் துறை சார்பில் காணாமல் போனவர்கள் வழக்கு பதிவு செய்யப்பட்டு, உறவினர்களுடன் சேர்க்கும் நிகழ்வு!

திருப்பூர்: திருப்பூர் மாநகரத்தில் காணாமல் போனவர்கள் வழக்கு பதிவு செய்யப்பட்டு, உறவினர்களுடன் சேர்க்கும் நிகழ்வு திருப்பூர் மாநகர காவல் துறை சார்பாக நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாநகரத்தில் காணாமல் போனவர்கள் வழக்கு பதிவு செய்யப்பட்டு, உறவினர்களுடன் சேர்க்கும் நிகழ்வு திருப்பூர் மாநகர காவல் துறை சார்பாக நடைபெற்றது.

திருப்பூர் மாநகர காவல்துறை சார்பில் திருப்பூர் மாநகரில் காணாமல் போனவர்களை கண்டுபிடித்து அவர்களது உறவினர்களிடம் சேர்க்கும் நிகழ்வு சிறுபூலுவப்பட்டி உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

இதில் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் வனிதா தலைமை வகித்தார். காவல் துணை ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) அரவிந்த், மற்றும் காணாமல் போனவர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் என ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.



இந்த நிகழ்ச்சியில் பெற்றோர்கள் குழந்தைகளை கவனித்து வளர்க்க வேண்டும். இல்லாவிட்டால் இது போன்ற நிகழ்வுகள் நடந்து கொண்டேதான் இருக்கும். வீட்டில் திட்டியதற்காக வீட்டை விட்டு வெளியேறுவது, பள்ளிக்குச் செல்ல விருப்பமில்லாமல் வீட்டை விட்டு வெளியேறுவது என இன்றைய காலத்தில் குழந்தைகளின் மனநிலை வேறுவிதமாக மாறி உள்ளது. இதனை பெற்றோர்கள் கவனிக்க வேண்டும் என போலீசார் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தினர்.

இதைத்தொடர்ந்து, திருப்பூர் மாநகர காவல் ஆணையர் வனிதா செய்தியாளர்களிடம் பேசுகையில், திருப்பூர் மாநகரில் காணாமல் போனவர்களை கண்டு பிடிப்பதற்காகவே தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2015ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை மொத்தம் 2,371 காணாமல் போனவர்கள் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அதில் 2,155 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 216 வழக்குகள் மட்டுமே நிலுவையில் உள்ளது.

கடந்த 2019ம் வருடம் 273 நபர்கள் காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு 246 நபர்களும், 2020ம் ஆண்டு 290 பேர்களில் 269 நபர்களும், 2021ம் ஆண்டு தற்போது வரை 223 பேர்கள் காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு 183 நபர்களை கண்டுபிடித்து அவர்களது உறவினர்கள் வசம் ஒப்படைக்கப் பட்டுள்ளனர்.

மேலும், கடந்த ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்களில் மொத்தம் 94 நபர்கள் காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு அதில் 71 நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். காணாமல் போனவர்கள் பற்றிய வழக்குகளை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது, ஏனெனில் இது அவர்களின் வாழ்க்கையை மாற்றக் கூடிய ஒன்றாக இருக்கும். கடந்த மூன்று மாதத்தில் பதியப்பட்ட வழக்குகளில் காணாமல் போன ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே, பெற்றோர்களும் உறவினர்களும் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.

Newsletter

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...