கோவை பீளமேடு பகுதியில் பேக்கரிக்குள் புகுந்து தகராரில் ஈடுபட்ட 5 பேரிடம் போலீசார் விசாரணை; ரூ. 80,000 பொருட்கள் சேதம்

கோவை: ஜூஸ் குடித்ததற்கு பணம் கேட்டதற்கு, பேக்கரிக்குள் ஆயுதங்களுடன் புகுந்து சூறை; 2 பேருக்கு மண்டை உடைப்பு.  சிறுவர்கள் உட்பட 5 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை.



 கோவை: ஜூஸ் குடித்ததற்கு பணம் கேட்டதற்கு, பேக்கரிக்குள் ஆயுதங்களுடன் புகுந்து சூறை; 2 பேருக்கு மண்டை உடைப்பு. சிறுவர்கள் உட்பட 5 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை. 

கோவை: கோவையில் பேக்கரியில் ஜுஸ் குடித்த வாலிபரிடம் காசு கேட்ட காரணத்தினால், நண்பர்களுடன் பேக்கரிக்குள் ஆயுதங்களுடன் புகுந்து பேக்கரியை அடித்து சூறையாடி, பேக்கரி 

உதவியாளர் மற்றும் கேசியரின் மண்டையை உடைத்த இரண்டு சிறுவர்கள் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். 



கோவை அவிநாசி ரோடு, சுகுணா கல்யாண மண்டபம். எதிரே உள்ள கட்டிடத்தில் டாஸ்மாக் மதுபான கடை அருகே மகாராஜா பேக்கரி செயல்பட்டு வருகிறது. இங்கே 5 பேர் கொண்ட கும்பல் மது குடித்துவிட்டு, அருகே உள்ள மகாராஜா பேக்கரிக்கு சென்று கூல்டிரிங்ஸ் கேட்டு வாங்கி குடித்துள்ளனர். 

பேக்கரியில் திருநெல்வேலி மாவட்டம் குப்பனாபுரம் பகுதியைச் சேர்ந்த கேசியர், செல்வின்துரை 24, மற்றும் கள்ளகுறிச்சி விராலியூரைசேர்ந்த சப்ளையர் மணிகண்டன் 22 பணியில் இருந்தனர். இந்த நிலையில், கூல்ட்ரிங்ஸ் குடித்ததற்கு கேசியர் செல்வின்பணம் கேட்டுள்ளார். அப்போது மது போதையில் இருந்தவர்கள் ஆத்திரமடைந்து என்னிடமே பணம் கேட்கிறாயா? எனதகராறில் ஈடுபட்டுள்ளனர். 



மேலும், பேக்கரியில் இருந்த பஞ்சிங் மெஷினை வைத்து தலையில் அடித்துள்ளனர், அப்போது தடுக்க முயன்ற சப்ளையர் மணிகண்டனையும் தாக்கியுள்ளனர். இதில், இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதை தொடர்ந்து பேக்கரியில் இருந்த பொருட்களையும் அந்தக் கும்பல் அடித்து நொறுக்கியது. 

இதில், சுமார் 80 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன என கூறப்படுகிறது. பின்னர், அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றதையடுத்து காயமடைந்த இருவரும் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேக்கரியில், பதிவான சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 



முதல்கட்ட விசாரணையில், பேக்கரி அடித்து உதைத்த நபர்கள் சௌரிபாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. மேலும், காயமடைந்த செல்வின்துரை மற்றும் சப்ளையர் மணிகண்டன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். 

தொடர் விசாரணையில், இரண்டு சிறுவர்கள் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் பீளமேடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...