பொள்ளாச்சி அருகே பி.ஏ.பி வாய்க்காலில் தண்ணீர் திருடி விற்பனை: முறைகேடாகத் தண்ணீர் எடுக்கும் விவசாயிகளுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை.!!

கோவை: பொள்ளாச்சி அருகே பி.ஏ.பி வாய்க்காலில் தண்ணீர் திருடி விற்பனை செய்வதாகவும், முறைகேடாகத் தண்ணீர் எடுக்கும் விவசாயிகளுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே பி.ஏ.பி வாய்க்காலில் தண்ணீர் திருடி விற்பனை செய்வதாகவும், முறைகேடாகத் தண்ணீர் எடுக்கும் விவசாயிகளுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத்தின் கீழ், திருமூர்த்தி அணையிலிருந்து, பிரதான கால்வாய் மூலம், தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

இந்த, பிரதான கால்வாயில் பல்வேறு இடங்களில், தண்ணீர் திருட்டு நடப்பதாகப் புகார் எழுந்து வந்தது. இதையடுத்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் இன்று கெடிமேடு அருகே வாய்க்கால் பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது பிரதான கால்வாயிலிருந்து முறைகேடாகக் குழாய் பதித்து, கிணறுகளுக்குத் தண்ணீர் கொண்டு வந்து அங்கிருந்து, லாரிகள் மூலம் தண்ணீரை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.



பொள்ளாச்சி தெற்கு மண்டல துணை வட்டாட்சியர், கோலார்பட்டி நில வருவாய் ஆய்வாளர், பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆகியோர் நடத்திய சோதனையின்போது, சுப்ரீம் வாட்டர் சர்வீஸ் நிறுவனத்தின் 12 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 6 லாரிகளிலும், 4000 லிட்டர் கொள்ளளவு கொண்ட சிறிய லாரி மற்றும் கண்ணன் வாட்டர் சர்வீஸ் நிறுவனத்தின் 12 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு லாரிகள் மூலமும் முறைகேடாகத் தண்ணீர் எடுத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

முறைகேடாகத் தண்ணீர் எடுத்து விற்பனை செய்வது சட்டத்திற்குப் புறம்பானது, எனவே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று விவசாயிகளுக்கு எச்சரித்த பொதுப்பணித் துறை அதிகாரிகள், தண்ணீர் திருட்டில் ஈடுபட்ட லாரிகளை பறிமுதல் செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...