கோவை: கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த ஹரிவர்ஷினி ராஜேஷ் (வயது-9). இவர் ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை புரியும் முயற்சியில் 9-மணி நேரத்தில் 9-கதைகள் அடங்கிய 9-புத்தகங்களை 9-இடங்களில் வெளியிடுகிறார்.

நான்காம் வகுப்பு படிக்கும் மாணவி ஹரிவர்ஷினி ராஜேஷ் கதைகள் கேட்பதிலும், கதைகளைச் சிறப்புடன் இயற்றுவதிலும் ஆர்வம் கொண்டவர். இந்நிலையில், ஏதேனும் சாதனைப் புரிய வேண்டும் என்ற நோக்கில் அவரது குடும்பத்தார் உதவியுடன் 9-புத்தகங்களை எழுதி வெளியிடும் முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

(குகைக்குள் பூதம், குக்கூ குக்கூ தவளை, மூணு கண்ண வந்துட்டான், ஐந்து பூதங்கள், காட்டுக்குள் திருவிழா, காண்டாமிருகம் எதுக்கு ஒடுது?, நிசாசினியின் மீன் பொம்மை, மேக்கப் போட்ட விலங்குகள், அரைப் பல்ல காணோம்) என்ற 9-புத்தகங்களை இவர் செயலி(Tamil typing APP) மூலம் வாசித்து அதனை பதிவு செய்துள்ளார்.
புத்தகங்களில் இடம்பெற்றுள்ள ஓவியங்களை இவரது அக்கா வர்த்தினி ராஜேஷ் வரைந்துள்ளார். ஒவ்வொரு புத்தகத்தின் பின் உள்ள QR கோர்டில் இவர் கதை சொல்லும் வீடியோ உள்ளது. இதனை இவரது தந்தை ராஜேஷ் உருவாக்கியுள்ளார்.

இதனையடுத்து, தற்போது இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனையில் இடம் பெரும் முயற்சியில் கோவையில் ஒன்பது இடங்களில் (கோனியம்மன் கோவில், சிங்காநல்லூர், விஜயா பதிப்பகம், ஐசிசி மருத்துவமனை, விஸ்டம் வோல்ட் மழலைப்பள்ளி, மருதமலை, பூண்டி, போளுவாம்பட்டி அங்காளம்மன் கோவில், பாரதியார் பல்கலைக்கழகம், ஸ்ரீவாரி கார்டன் இல்லம்) ஆகிய இடங்களில் பொதுமக்களிடம் வழங்குகிறார்.