ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை மலர் சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதியது.!! பூக்களின் விலையும் 3-மடங்கு உயர்ந்த போதிலும் பூக்கள் வாங்க மக்கள் ஆர்வம்.!!

கோவை: கேரள மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், கோவையில் உள்ள மலர் சந்தையில் பூக்கள் வாங்க மக்கள் கூட்டம் அலை மோதியது.



கோவை: கேரள மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், கோவையில் உள்ள மலர் சந்தையில் பூக்கள் வாங்க மக்கள் கூட்டம் அலை மோதியது.

கோவையிலும், கோவை மாவட்டத்திலுள்ள தமிழக கேரள எல்லைப்பகுதி கிராமங்களிலும், ஓணம் பண்டிகை களை கட்டியுள்ளது. கோவை ரங்கேகவுடர் மற்றும் பெரியகடை வீதியிலுள்ள, பூக்கள், மளிகை மற்றும் காய்கறி மார்க்கெட்டில் நேற்று வியாபாரம் சூடுபிடித்தது.

கோவையிலிருந்து கேரளா மற்றும் தமிழக எல்லையிலுள்ள கிராமப்பகுதிகளுக்கு மளிகைப்பொருட்கள் லாரிகளில் கொண்டு செல்லப்பட்டது.



அதே போல் ஓணம் பண்டிகைக்குத் தேவையான பூக்கள் வாங்குவதற்குச் சந்தைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.



மலர் சந்தையில் கூட்டம் அதிகமாகக் காணப்படும் கடைகளில் மாநகராட்சி அதிகாரிகள் முககவசம், சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு செண்டு மல்லி கிலோ ரூ.160, செவந்தி கிலோ ரூ.100, முல்லை கிலோ ரூ. 1000, வாடாமல்லி கிலோ ரூ.320, வெள்ளை செவ்வந்தி ரூ.200, சிவப்பு ரோஜா கிலோ ரூ. 320, மல்லி கிலோ ரு.2000 சமங்கி கிலோ ரூ.200, கோழி கொண்டை கிலோ ரூ.160, தேன் செவ்வந்தி கிலோ ரூ.160, சிவப்பு ரோஜா 240, கலர் ரோஜா கிலோ 280, மஞ்சள் ரோஜா 320, ஹாஸ்டல் 320 அனைத்து பூக்களின் விலையும் 3 மடங்கு கூடியிருக்கிறது.

கொரோனா இரண்டாம் அலை காரணமாக ஊரடங்கு மற்றும் சில கட்டுப்பாடுகளைத் தமிழக அரசு அறிவித்த நிலையில், கோயில்களில் பூஜைகள் மட்டுமே நடத்த அனுமதிக்கப்பட்டதுடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.

அதேபோல் கடந்த ஆடி மாதத்தில் ஆடிமாத விழாக்கள் கொண்டாடப்படாத நிலையில், தற்போது ஓணம் பண்டிகையை முன்னிட்டு சந்தையில் பூக்களின் விலையும் கிடுகிடு உயர்ந்திருந்தாலும் மக்கள் ஓணம் பண்டிகைக்காகப் பூக்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...