வால்பாறையில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ. 426 சம்பளம் உயர்த்தி முதலமைச்சர் உத்தரவு - தொழிலாளர்கள் மகிழ்ச்சி!

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு 426 ரூபாய் சம்பளம் உயர்த்தி வழங்கிய முதலமைச்சர் அவர்களுக்கு எஸ்.ஆர்.எஸ் சுரேஷ் தலைமையில் நன்றி தெரிவித்தனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு 426 ரூபாய் சம்பளம் உயர்த்தி வழங்கிய முதலமைச்சர் அவர்களுக்கு எஸ்.ஆர்.எஸ் சுரேஷ் தலைமையில் நன்றி தெரிவித்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் தேயிலை தோட்ட எஸ்டேட் சுமார் 60 உள்ளன. இந்த எஸ்டேட் பகுதிகளில் சுமார் 50 ஆயிரம் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு தற்போது 347 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, இந்த ஆண்டு சம்பள பேச்சு வார்த்தை நடந்து வந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினையை ஆய்வு செய்து 426 ரூபாய் சம்பளம் வழங்க ஆணை பிறப்பித்தார்.

இதனை வரவேற்று தேயிலை தோட்ட தொழிலாளர்கள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். வால்பாறை 7வது வார்டு ஸ்டேன்மோர் ஆத்து மட்டம் எஸ்டேட், புது தோட்டம் பாரலை எஸ்டேட் தொழிலாளர்கள், முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

இந்நிகழ்வில், வால்பாறை நகர பொறுப்பாளர் பால்பாண்டி வர்த்தக அணி ஜெ. பாஸ்கர், தொழில் நுட்ப அணி சத்தியமூர்த்தி மற்றும் 7வது வார்டு கிளை செயலாளர் எஸ்.ஆர்.எஸ் சுரேஷ் விஜயன், பாபு, சுப்பிரமணி, ராஜ்குமார், வேதநாயகம், காளிமுத்து, பாபு, பார்வதி, தனம், கவிதா, சங்கீதா, ஜெயா போன்ற தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...