கோவை: கோவை அருகே பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் மிகவும் அலட்சியமாக, பாதுகாப்பற்ற முறையில் நடைபெறும் மேம்பால பணிகள் காரணமாக அன்றாடம் விபத்துகள் நடந்த வண்ணம் உள்ளது. உடனடியாக, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: கோவை அருகே பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் மிகவும் அலட்சியமாக, பாதுகாப்பற்ற முறையில் நடைபெறும் மேம்பால பணிகள் காரணமாக அன்றாடம் விபத்துகள் நடந்த வண்ணம் உள்ளது. உடனடியாக, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரூ. 85 கோடி மதிப்பில் மேம்பால கட்டுமான பணிகள்
கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் பெ.நா.பாளையம், ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா முதல் சாமிசெட்டிபாளையம் பிரிவு வரை 1. 4 கிலோ மீட்டர் நீளத்துக்கு, சுமார் ரூ.85 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டுமான பணி துவங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக, பெ.நா.பாளையம் அருகே எல்.எம். டபிள்யூ பிரிவிலிருந்து, சாமிசெட்டிபாளையம் பிரிவு வரை சாலையோரம் இருந்த ஆக்கிரமிப்புகள், புளிய மரங்கள் அகற்றப்பட்டு, தற்போது, மேம்பாலம் கட்டுமான பணி வேகமாக நடந்து வருகிறது.

குறிப்பாக, எல்.எம்.டபிள்யூ பிரிவு பெ.நா.பாளையம் பஸ் ஸ்டாண்ட், சாமிசெட்டிபாளையம் பிரிவு ஆகிய பகுதிகளில் தூண்கள் அமைக்க, ராட்சத குழிகள் தோண்டப்பட்டு உள்ளன. இதில், எல்.எம். டபிள்யூ பிரிவு பகுதியில் இருந்து சாமிசெட்டிபாளையம் வரை தூண்கள் அமைக்கும் பணி, மும்மரமாக நடந்து வருகிறது. இதனால், அப்பகுதி முழுவதும் தூசிமயமாக உள்ளதால், வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் வாகனங்களை இயக்கும் நிலை இருந்து வருகிறது.
ராட்சத குழிகள் அருகே போதுமான தடுப்புகள் இல்லை.!

"சில இடங்களில் ராட்சத குழிகள் தோண்டப்பட்டு பில்லர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அலட்சியமாக, முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. ராட்சத குழிகளை ஒட்டியபடி தான் வாகனங்கள் அனைத்தும் செல்ல வேண்டிய சூழல் உள்ளது. ராட்சத குழிகள் அருகில் தடுப்புகள் போதுமான அளவு அமைக்கப்படவில்லை. இதனால், வாகன ஓட்டிகள் தள்ளாடியபடி, வாகனத்தை இயக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சிறிய கவனைக்குறைவு கூட, பெரிய விபத்து ஏற்ப்பட வழிவகுக்கும்", என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தொடரும் உயிரிழப்புகள்; நிலவில் வாகனங்களை ஒட்டுவது போல் உள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘பெ.நா.பாளையம் மேம்பால பணிகள் தொடர்ந்து அலட்சியாமாக நடைபெற்று வருகிறது. ராட்சத குழிகள் தோண்டப்பட்டன, ஆனால் தடுப்புகள் முறையாக அமைக்கப்படவில்லை. ராட்சத குழிகளில் வாகனங்கள் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், சர்வீஸ் சாலை அமைக்கப்படாமல் உள்ளதால் எங்கும் புழுதி காற்று மயமாக உள்ளது. நேற்று கூட இந்த பகுதியில் ஒரு விபத்து நடந்தது. ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சர்வீஸ் சாலைகள் அமைக்கப்படவில்லை என்பதால் நிலவில் வாகனங்களை ஒட்டுவது போல் உள்ளது," என்றனர்.
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ மேம்பாலம் பணிகள் போதுமான பாதுகாப்புடன் தான் நடைபெற்று வருகிறது.

பில்லர் அமைக்கும் பல இடங்களில் குடிநீர் குழாய்கள் செல்கின்றன. எனவே, அவை சேதம் அடையாமல், பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேம்பால பணிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். சர்வீஸ் சாலைகள் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன," என்றார்.