கோவை அருகே தனியார் கார் பந்தய மைதானத்தில் கொரோனா விதிமீறல் - ரூ. 10 ஆயிரம் அபராதம்!

கோவை: கோவை அருகே உள்ள தனியார் கார் பந்தய மைதானத்தில் விதிமீறல் நடந்ததால் ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


கோவை: கோவை அருகே உள்ள தனியார் கார் பந்தய மைதானத்தில் விதிமீறல் நடந்ததால் ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். அத்துடன் தனியார் நிறுவனங்கள் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுபோன்று பொது இடங்களில் அதிக அளவில் கூட்டம் கூட கூடாது என்றும், பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கோவையை அடுத்த செட்டிபாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஓரட்டுகுப்பை பகுதியில் எல்.ஜி கார் பந்தய மைதானம் உள்ளது. இங்கு அதிக நபர்கள் கூடி பயிற்சியில் ஈடுபடுவதாக பேரூராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதுகுறித்து, மாவட்ட பேரூராட்சிகள் உதவி இயக்குனர் துவாரகநாத், மதுக்கரை தாசில்தார் நாகராஜ், மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குனர் உமாதேவி, செட்டிபாளையம் செயல் அதிகாரி ஜெகதீஸ் மற்றும் போலீசார் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.



அப்போது, அந்த விதிமுறைகளை மீறி கூட்டம் சேர்த்தல், தனிமனித இடைவெளி இல்லாமலும், சிலர் முகக் கவசம் அணியாமல் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அதிகாரிகள் எல்ஜி கார்பந்தய நிர்வாகத்துக்கு ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும், கொரோனா விதிமுறைகளை மீறினால் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...