கோவை: பொள்ளாச்சியை அடுத்த மேற்குத் தொடர்ச்சி மலையில் பரம்பிக்குளம் அணை நிரம்பும் தருவாயில் இருப்பதால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பொள்ளாச்சி அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இந்த மாதம் துவக்கத்திலிருந்தே பல நாட்களாகத் தொடர்ந்து மழை பெய்தது. இதன் காரணமாக பி.ஏ.பி திட்ட அணைகளுக்குத் தண்ணீர் வரத்து அதிகரித்ததுடன் டாப்ஸ்லிப் அருகே மொத்தம் 72-அடி கொண்ட பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் விரைவாக உயர்ந்தது.
கடந்த வாரத்தில் விநாடிக்கு அதிகபட்சமாக 3-ஆயிரம் கன அடி வரையிலும் தண்ணீர் வரத்து இருந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 65-அடியாக உயர்ந்தது.
கடந்த சில நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் போதிய மழை இல்லாமல் இருந்ததாலும் சோலையார் அணையிலிருந்து தண்ணீர் திறப்பால் பரம்பிக்குளம் அணைக்குத் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது.
நேற்றைய நிலவரப்படி, அணைக்குத் தண்ணீர் வரத்து வினாடிக்கு ஆயிரத்து 1,900-கன அடியாக இருந்தது. இருப்பினும் திருமூர்த்தி அணை பாசன தேவைக்காக வினாடிக்குஆயிரம் கன அடி வீதம் காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்குத் தண்ணீர் திறப்பு தொடர்ந்துள்ளது.
தற்போது பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 68-அடியாக உள்ளது. அணை நிரம்ப இன்னும் 4-அடியே தேவை. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விரைவில் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்ட வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.