திருப்பூர்: திருப்பூரில் பொதுத்துறை வங்கிகளை, தனியார் மயமாக்கும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும். இல்லாவிட்டால் பொதுமக்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என அனைத்திந்திய தேசியமயமாக்கப்பட்ட வங்கி அதிகாரிகள் சங்க பொதுச் செயலாளர் மணிமாறன் கூறினார்.

நடப்பாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் 2021-22-ம் நிதி ஆண்டில் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள மத்திய அரசின் குறிப்பிட்ட சதவிகித பங்குகளை விற்று ரூ.1.75 லட்சம் கோடி நிதி திரட்டப்படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.
இதன் முதற்கட்டமாகத் தனியார்மயமாக்க இரு வங்கிகள், காப்பீடு நிறுவனத்தைத் தேர்வு செய்யும் பொறுப்பு, மத்திய அரசின் கொள்கைகளை வகுக்கும். நிதி ஆயோக் அமைப்பிடம் வழங்கப்பட்டது.
அந்த அமைப்பு வழங்கிய பட்டியலில், பாங்க் ஆஃப் இந்தியா, யூகோ வங்கி, பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா போன்ற வங்கிகளின் பெயர்களும் இடம் பெற்றிருந்தாலும், இவற்றிலிருந்து சென்ட்ரல் வங்கி, ஐ.ஓ.பி-யை முதற்கட்டமாக மத்திய அரசு தேர்வு செய்து, அதற்கான பணிகளில் இறங்கியிருக்கிறது.

ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வலுத்து வருகிறது. இதனிடையே அனைத்திந்திய தேசியமயமாக்கப்பட்ட வங்கி அதிகாரிகள் சங்கமும் ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அனைத்திந்திய தேசியமயமாக்கப்பட்ட வங்கி அதிகாரிகள் சங்க பொதுச்செயலர் மணிமாறன் கூறுகையில், பொதுத்துறை வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்.
இந்தியாவின் எந்த வங்கிக் கிளையிலும் சேவைக் கட்டணம் இன்றிப் பணம் எடுக்கலாம். மற்ற வங்கிகளில் இந்த சேவைக்குத் தனியாகக் கட்டணம் வசூலிக்கிறார்கள். குறிப்பாக, கிராமப்புற மக்களுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் ஆற்றி வரும் சேவை மகத்தானது.

மக்களுக்குச் சேவை செய்து கொண்டும். அதேசமயம் லாபத்திலும் இயங்கும் இந்தியன் ஓவர்சீஸ் போன்ற வங்கிகளை விற்க முயல்வது தவறான போக்காகும். தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் கடந்த 85 ஆண்டுகளாக இயங்கிவரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் முடிவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்.
பொதுமக்களும் இதற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும். ஒன்றிய அரசு இந்த நடவடிக்கையைக் கைவிடாவிட்டால் பொதுமக்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.