களரிப்பயட்டு போட்டிகளில் 8-பதக்கங்கள் - தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்த ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள்!

கோவை: தேசிய அளவிலான களரிப்பயட்டு போட்டிகளில் பங்கேற்ற ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள் ஒரு தங்கம், 2 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 8 பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளனர்.


கோவை: தேசிய அளவிலான களரிப்பயட்டு போட்டிகளில் பங்கேற்ற ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள் ஒரு தங்கம், 2 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 8 பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

இந்தியப் பாரம்பரிய கலைகளில் களரிப்பயட்டு ஒரு முக்கிய கலையாகும். சாகசம் நிறைந்த இக்கலையை ஊக்குவிப்பதற்காக இந்தியக் களரிப்பயட்டு கூட்டமைப்பு ஆண்டுதோறும் தேசிய அளவிலான போட்டிகளை நடத்தி வருகிறது.



அதன்படி, 2020-21-ம் ஆண்டிற்கான போட்டிகள் ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்கி 14-ம் தேதி வரை இணையம் வாயிலாக நடைபெற்றது. இதில் 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களிலிருந்து சுமார் 600-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.



தமிழகத்திலிருந்து ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்களும் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.

போட்டிகளின் முடிவில், மெய்பயட்டு பிரிவில் ஈஷா சம்ஸ்கிருதி மாணவர் சீனிவாசன் தங்கப் பதக்கமும், பத்மேஷ் ராஜ் வெள்ளிப் பதக்கமும், அரவமுதன் மற்றும் மாணவிகள் அக்ஷயா, வினோதினி ஆகிய மூவரும் வெண்கல பதக்கங்களும் வென்றனர்.

உரிமி பிரிவில் மாணவர் பிரசன்னா வெள்ளிப் பதக்கமும், கெட்டுகரி பிரிவில் சீனிவாசன் மற்றும் லோகேஷ் வெண்கல பதக்கங்களும் வென்றனர். சுவாடு பிரிவில் இன்ப தமிழன் வெண்கலம் பதக்கமும் வென்றார். இதன்மூமல், ஈஷா சம்ஸ்க்ரிதி மாணவர்கள் மொத்தம் 8 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.

கோவையில் உள்ள ஈஷா சம்ஸ்கிருதியில் இந்தியாவின் பாரம்பரிய கலைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இசை, நடனம், யோகா ஆகியவற்றுடன் சேர்த்து சாகச கலையான களரியும் கடந்த 13 வருடங்களாகக் கற்றுக்கொடுக்கப்பட்டு வருகிறது.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...