கோவையில் இதுவரை 9500 மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி - மாவட்ட நிர்வாக அதிகாரி தகவல்!

கோவை: கோவையில் இதுவரை 9500 மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாக அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்டத்தில் இதுவரை 9500 மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, பொதுமக்கள், தொழில்துறையினர், முன்களப்பணியாளர்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள், வியாபாரிகள் போன்ற பலருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே மாவட்டத்தில் இதுவரை 9500 மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில்,

‘‘கோவை மாவட்டத்தில் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இவர்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள். இவர்களில் 9500 பேருக்கு சிறப்பு முகாம்கள் மூலம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மருத்துவர்களின் பரிந்துரைப்படியும், தடுப்பூசி போடும் முன்பு மருத்துவரின் ஆலோசனைப்படியும் தான் இவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. விரைவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் தடுப்பூசி போடப்படும்,’’ என்றார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...